வாலிபர் இழந்த பணத்தை சைபர்கிரைம் போலீசார் அதிரடியாக மீட்டனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். முகநூல் மூலம் மூர்த்திக்கு நண்பர் ஒருவர் அறிமுகமானார். இந்நிலையில் செல்போன் மூலம் மூர்த்தியை தொடர்பு கொண்ட அந்த நபர் தான் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்த நிறுவனத்தில் உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என அந்த நபர் கூறியுள்ளார். இதனை நம்பிய மூர்த்தி அவரது வங்கி கணக்கிற்கு 85 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார்.
ஆனால் கூறியபடி அந்த நபர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து மூர்த்தி சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட வங்கி கணக்கு எண்ணை முடக்கி 65 ஆயிரம் ரூபாயை மீட்டனர். சமூக வலைதளத்தில் வரும் போலியான விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அவினவ் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.