முகநூலில் நட்பாக பழகி வாலிபரிடம் இருந்து செல்போனை பறித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவ நல்லூர் பகுதியில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடன் முகநூலில் 3 பேர் நட்பாக பேசி உள்ளனர். இந்நிலையில் 3 பேரும் நவீன்குமாரிடம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடம் அருகில் வருமாறு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து நவீன்குமார் அங்கு சென்றதும், 3 பேரும் அவரிடமிருந்த ஏ.டி.எம் கார்டு, செல்போன் போன்றவற்றை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து நவீன்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்ணன், இசக்கி, சதீஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.