Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முகநூலில் குடும்ப புகைப்படத்தை பதிவிட்டு…. பணம் கேட்டு மிரட்டிய வாலிபர்…. சைபர் கிரைம் போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாட்ஸப்பில் முகப்பு புகைப்படமாக தனது குடும்பத்தினரின் புகைப்படத்தை வைத்துள்ளார். இவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தனது குடும்ப புகைப்படத்தை ஒருவர் எடிட் செய்து அவதூறாக முகநூலில் பதிவிட்டார். அதனை நீக்க என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு செல்ல பாண்டியன் மேற்பார்வையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சரத்குமார் என்பவர் கார்த்திக்கிடம் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோன்று சரத்குமார் பலரிடமிருந்து மிரட்டி பணம் பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது. எனவே பொதுமக்கள் தேவை இல்லாமல் சமூக வலைத்தளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும், பணத்தை இழந்தால் சைபர் கிரைம் உதவி எண் 1930- ஐ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்ல பாண்டியன் கூறியுள்ளார்.

Categories

Tech |