Categories
தேசிய செய்திகள்

முகநூலில் பழகிய நபரை நம்பிச் சென்ற சிறுமி… லாட்ஜுக்குள் வைத்து அரங்கேறிய கொடுமை… அதிர்ச்சி சம்பவம்..!!!

முகநூலில் பழகிய நபரை நம்பிச் சென்ற சிறுமியை லாட்ஜில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பன்ட்வாலா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி முகநூலில் ஒரு நபருடன் பழகி வந்துள்ளார். இந்த நட்பானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் தொலைபேசி எண்ணை பகிர்ந்துகொண்டு பேசிக் கொண்டுவந்துள்ளனர். கடந்த 8ஆம் தேதி சிறுமியை மங்களூரு நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு வரும்படி அந்த நபர் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணும் அங்கு சென்றுள்ளார். அந்த பெண்ணிடம் பேசி லாட்ஜ் ஒன்றுக்கு அழைத்துச் சென்று அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தனது நண்பர் இருவரையும் லாட்ஜுக்கு வரவழைத்து சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த சிறுமி பேருந்தில் பன்ட்வாலா
பகுதிக்கு திரும்பியுள்ளார். பின்னர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாருதி, மஞ்சுநாத், சதீஷ் மற்றும் இதயதுல்லா என்ற நான்கு பேரை கைது செய்தனர். அவர்கள் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |