Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“முகநூல் நட்பு” உங்களுக்கு பரிசு அனுப்பிருக்கேன்…. நூதனமாக 2,59,000 ரூபாய் மோசடி….!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் முகநூல் மூலம் ஒருவரிடம் நண்பர் என்ற முறையில் பழகியுள்ளார். இந்நிலையில்  அந்த நபர் செல்போன் எண்ணிலிருந்து பிரவீன்குமார் வாட்ஸ் அப்பில்உங்களுக்கு  பரிசுப்பொருட்கள் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். இதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி செல்போன் மூலம் பிரவீன் குமாருக்கு தொடர்புகொண்டு பரிசுப் பொருள்கள் கொரியரில் வருவதாக கூறியுள்ளார்.

வெவ்வேறு நம்பரில் இருந்து அழைத்து கொரியர் வந்துள்ளதாகவும் அதற்கு டெலிவரி கட்டணம் கொடுக்க வேண்டும் எனவும் அந்த பரிசு பொருட்களுக்கு ரூபாய் 2  லட்சத்து 59 ஆயிரத்து 500 ரூபாய் கட்டவேண்டும் எனவும் கூறியுள்ளார். இதை நம்பிய பிரவீன்குமார் 2 வங்கி கணக்குகளுக்கு மொத்த பணத்தையும் அனுப்பிவைத்துள்ளார்.

ஆனால் அந்த நபர் எந்த ஒரு பரிசு பொருட்களையும் அனுப்பி வைக்காமல்  பணத்தை ஏமாற்றி மோசடி செய்துள்ளார். இதுகுறித்து பிரவீன் குமார் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசாரிடம் தகவல் தெரிவிக்க இந்த மர்ம நபர் யார் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |