தக்கலை அருகே முகநூல் மூலம் பழகிய பிளஸ்-2 மாணவிக்கு வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருங்கல் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி என்பவரும், தக்கலை அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவியும் முகநூல் மூலம் நட்பாகி உள்ளனர். அவர்கள் இருவரும் அடிக்கடி வாட்ஸ்அப் மற்றும் முகநூல் மூலம் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இதனால் அவரது நட்பு நெருக்கமானது. சம்பவ தினத்தன்று ஷாஜி தனது மோட்டார் சைக்கிளில் மாணவி வீட்டின் அருகே சென்றார். அங்கிருந்து அவர் செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி மாணவியை வரவழைத்தார்.
பின்னர் மாணவியை வலுக்கட்டாயமாக தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி பேச்சிப்பாறை அருகே உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் ஷாஜி மாணவியை மீண்டும் அவரது வீட்டில் விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி அந்த மாணவி தனது தாயாரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனால் மாணவியின் தாயார் அதிர்ச்சி அடைந்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, ஷாஜி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடிவருகின்றனர். வாலிபர் முகநூலில் நட்பாக பழகி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.