Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகப்பருவினால் ஏற்படும் தழும்புகளை நீக்க…”வாரம் ஒரு முறை இத ட்ரை பண்ணுங்க”… ஒரே நாள்ல சரியாயிடும்..!!

முகப்பருக்கள் வராதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். முகப்பரு வந்து மறைந்தாலும் அதன் தழும்புகள் அப்படியே இருக்கும். இது அழகை அசிங்கமாக காட்டும். இதற்கு சிறந்த தீர்வு வெந்தயம். வெந்தயம் முகப்பரு தழும்புகளை நீக்குவதில் மிக சிறந்ததாக பயன்படுகிறது.

முகப்பரு தழும்புகளை நீக்க நீங்கள் இந்த வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்ப்போம்

வெந்தயத்தை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி மாஸ்க் போல் பயன்படுத்தலாம். தழும்புகளின் மீது தடவி அவற்றை நீக்க முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து முகத்தில் தடவி வந்தால் தழும்புகள் மறைவதோடு பருக்கள் மேலும் உருவாவதையும் தடுக்கும்.

பன்னீருடன் சந்தனத்தை கலந்து பேஸ்ட் போல் உருவாக்கி அதை முகத்தில் மாஸ்க் போட்டு கொண்டு ஒரு மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் மிகவும் நல்லது.

சுடுதண்ணீரில் வெந்தயத்தை நன்றாக கொதிக்க வைத்து பின்னர் அதை அரைத்து குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும். இதை தழும்புகள் மீது தடவி 15 முதல் 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

எலுமிச்சை சாற்றில் பஞ்சை நனைத்து அதை முகப்பரு மீது தடவினால் கரும்புள்ளிகள் மறையும்.

Categories

Tech |