முகமது நபி தொடர்பாக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்களின் சர்ச்சைக்குரிய கருத்து அரபு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சைக்கு மத்தியில் இந்தியா வந்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் அப்துல்லா ஹியன், பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ஆகியோரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முகமதுநபி தொடர்பாக பா.ஜ.க செய்தி தொடர்பாளரின் கருத்து பற்றி இந்தியாவிடம் ஈரான் கவலை தெரிவித்ததாகவும், அப்போது இந்திய தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் திருப்தி அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.