Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முகமூடிக்குள் மீசை…. மண்ணுக்கடியில் நகை…. அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்…!!

நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையரை அவரின் மீசையை துப்பாக வைத்து காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

சென்னையில் உள்ள தி.நகர் பகுதியில் ராஜேந்திரகுமார் என்பவருக்கு சொந்தமாக நகைக்கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் கடந்த மாதம் சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடை உரிமையாளர் காவல்துறையில் புகார் அளிகத்துள்ளார். எனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையடுத்து கோடம்பாக்கம் மார்க்கெட் சுரேஷ், அப்பு என்கிற வெங்கடேசன், அமல்ராஜ் மற்றும் சுரேஷின் காதலி கங்காதேவி ஆகியோர் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.

காவல்துறையினரிடம் சிக்கிக்கொண்ட கங்காதேவியிடம் விசாரணை நடத்தியதில், அவரது வீட்டிற்குப் பின்புறம் மண்ணுக்கடியில் நகைகளை புதைத்து வைத்திருப்பதாக கூறியதையடுத்து காவல் துறையினர் நகைகளை மீட்டனர். மேலும் இக்கொள்ளை சம்பவம் நடந்த மூசா தெருவிலிருந்து திருவள்ளுவர் புட்லூர் வரை உள்ள சிசிடிவி கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்து வந்தனர். அப்போது நகைக் கடையில் இருந்த கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளை சம்பவம் நடந்த போது ஒருவர் தன்னுடைய முகமூடியை எடுத்துவிட்டு மீண்டும் மாற்றும்போது அவரது மீசை வெளியே தெரிந்துள்ளது.

இதையடுத்து அந்த மீசையை துப்பாக வைத்து காவல்துறையினர், அதை பழைய திருடர்களின் புகைப்படத்தோடு ஒப்பிட்டுப் பார்த்ததில் அது கோடம்பாக்கம் மார்க்கெட் சுரேஷ் என்பது தெளிவாகியுள்ளது. இதன்பின்னர் அவருடன் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர.

Categories

Tech |