Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

முகம் கழுவுவதற்காக சென்ற இளம்பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள தளவாய்புரம் பிள்ளையார் கோவில் தெருவில் செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி(30) என்ற மகள் இருந்ள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட முத்துலட்சுமி முகம் கழுவுவதற்காக அப்பகுதியில் இருக்கும் கிணற்று படிக்கட்டில் இறங்கியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்த முத்துலட்சுமி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |