Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

முகம் சிதைக்கப்பட்டு கிடந்த சடலம்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. திருப்பூரில் பரபரப்பு…!!

கல்லால் அடித்து முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே சேகம்பாளையம் பகுதியில் இருக்கும் ஒரு பனியன் தொழிற்சாலையில் 4 மாதங்களாக தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பல்லடம் பகுதியில் இருக்கும் ஒரு காட்டுப்பகுதியில் மாரிமுத்து முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த  காவல்துறையினர்  சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்து  மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் காவல் துறையைச் சேர்ந்த மோப்ப நாய்  மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாரிமுத்துவை கல்லால் தாக்கி கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |