அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. அதில் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவித்தது. மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் தெரிவித்தது. இதனால் ஓபிஎஸ் தரப்பு மிகவும் மகிழ்ச்சி அடைந்த நிலையில் இபிஎஸ்க்கு இந்த தீர்ப்பு பெரும் பின்னடையவே ஏற்படுத்தியது.
அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்புக்கு பின் இபிஎஸ் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளார். பூச்சிக்கடி காரணமாக இபிஎஸ் முகத்தில் தடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தீர்ப்புக்கு பின் அவர் செய்தியாளர்களை கூட சந்திக்கவில்லை. வீட்டிற்குள் முடங்கி இருந்தாலும், சட்டநடவடிக்கை மேற்கொள்வது குறித்து, சட்ட வல்லுநர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார். மேலும், அவரின் தரப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது