Categories
உலக செய்திகள்

முகாமில் உள்ள குடும்பங்கள்…. மனஅழுத்தத்தை குறைக்க நடன பயிற்சி…. உற்சாகத்தில் ஆப்பிரிக்க குழந்தைகள்….!!

ஆப்பிரிக்க முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை உற்சாகமளிக்க நடன பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஆப்பிரிக்காவில் நிராகோங்கோ எரிமலை சமீபத்தில் வெடித்ததில் குறைந்தது 30 பேர் உயிரியிழந்தனர். இந்த இயற்கை பேரழிவால் 3,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளை இழந்தனர்.  இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் பல்வேறு பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், கோனகரா முகாம்களில் தங்கியிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த 3 முதல் 10 வயதுடைய  குழந்தைகளுக்கு இணுகா நடனப் பயிற்சி சார்பில் நடனம் கற்று கொடுக்க படுகிறது.

இதனையடுத்து இணுகா நடனப் பள்ளி நிறுவனர் மற்றும் பயிற்சியாளர் ஃபெர்லீன் கசோலின், நடனப் பயிற்சியானது குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்ல முடியாத சூழலில் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் பதற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளிலிருந்து மீளவும், சக மனிதர்களுடன் பழகும் பழக்கத்தை வளர்க்கவும் உதவும் என்று கூறினார். மேலும் குழந்தைகளுக்கு நடனப் பயிற்சி அளிக்கப்படும் வெற்றிடத்தில் ஒரு சிறிய மேடை போல அமைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது.  இதனால் குழந்தைகள் தங்களது துயரத்தை மறந்து சந்தோஷத்தில் துள்ளல் ஆட்டம் போடுகின்றனர்.

Categories

Tech |