16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அச்சப்பன் என்பவர் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுக்குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதன்மீது புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அச்சப்பனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.