இந்திய வரைபடத்துடன் சுற்றித்திரிந்த வடமாநில வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்திய கடற்கரை முகாம் அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த முகாம் அலுவலகத்திற்கு கடற்கரை வழியாக புகுந்த மர்ம நபரை பிடித்து இந்திய கடற்படையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அந்த நபர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வசித்து வரும் அபிஷேக் சுக்லா என்பது தெரியவந்துள்ளது. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே சென்னையில் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்து விட்டு தற்போது நாகூருக்கு வந்துள்ளார்.
மேலும் அபிஷேக் சுக்லாவிடம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு மேப் மற்றும் பணம் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அபிஷேக் சுக்லா பயங்கரவாதியாக இருக்க கூடுமோ? என்ற சந்தேகத்தில் அவரிடம் விசாரணை நடத்தினர். அதற்கு அபிஷேக் சுக்லா முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளார். இதனையடுத்து பிடிபட்ட வடமாநில வாலிபரை மத்திய உளவுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.