Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“முகூர்த்த நேரத்தில் விபத்து” மரணத்தை மறைத்து நடந்த திருமணம்….. பின் கதறிய மணப்பெண்…. சேலம் அருகே சோகம்….!!

தம்பி ஒருவர் தனது அக்காவின் திருமணத்தன்று சாலை விபத்தில் உயிரிழந்ததால் அக்கா கதறியழுத சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. 

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் வசிப்பவர் ஜெகதீசன்(24). இவருடைய அக்காவிற்கு திருமணம் என்பதால் திருமணத்திற்கு செல்வதற்காக ஜெகதீசன் தன்னுடைய நண்பர்களான கார்த்திகேயன்(20) மற்றும் பார்த்தசாரதி(20) என்ற இருவரையும் தன்னுடன் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். இருசக்கர வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழிப் பாதையில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.

இதனால் பார்த்தசாரதி மற்றும் ஜெகதீசன் தூக்கி வீசப்பட்டுள்ளனர். மேலும் கார்த்திகேயன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கார்த்திகேயன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் 3 வாலிபர்களும் உயிரிழந்த சம்பவத்தை கேட்டு பெண்ணின் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் முகூர்த்த நேரமும் நெருங்கி கொண்டே இருந்ததால் என்ன செய்வதென்று அறியாத பெண் வீட்டார்கள் திருமணம் நின்று விடுமோ என்ற பயத்தில் தம்பி இறந்தது கூட கல்யாணப் பெண்ணிற்கு  சொல்லாமல் வைத்துள்ளனர். குறித்த நேரத்திற்குள் திருமணம் முடிந்ததையடுத்து மணப்பெண்ணிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற மணப்பெண் தனது தம்பியின் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

இதையடுத்து காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் நடந்ததற்கு முக்கிய காரணம் விபத்து நடந்த இடம் ஒரு வழிப்பாதை மற்றும் 3 பேர் ஒரு இருசக்கர வாகனத்தில் சென்றதால் பேலன்ஸ் தாங்க முடியாமல் விபத்து நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |