Categories
மாநில செய்திகள்

முகேஷ் அம்பானி வீட்டருகே மர்ம கார்…. சோதனையில் கிடைத்த பொருள்… மும்பையில் பரபரப்பு…!!

முகேஷ் அம்பானியின் இல்லத்திற்கு அருகில் வெடிபொருளுடன் நின்ற காரினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

 

மகாராஷ்டிரா தலைநகர் மும்பை அல்டாமவுண்ட் ரோட்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் அன்டிலா ஹவுஸ் உள்ளது.இது பல சொகுசு வசதிகளுடன் கட்டப்பட்ட 27 மாடி கட்டிடம் ஆகும். இந்நிலையில் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு அருகே சொகுசு கார் ஒன்று சந்தேகத்திற்கு இடமளிக்கு வகையில் நின்று கொண்டிருந்ததாக காவல் துறையினருக்கு தகவல் சென்றுள்ளது.இந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர்,வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் குழு,பயங்கரவாத தடுப்பு குழு ஆகிய மூன்றும் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

 

பின்னர் காரை திறந்து பார்த்ததில் அதில் ஜெலட்டின் குச்சிகள் மட்டுமே இருந்தது.உடனே வெடிகுண்டு அகற்றும் குழு அதை அப்புறப்படுத்தி விட்டது பின் அந்த காரை காவல்துறையினர் கைப்பற்றி சென்றனர்.காரின் நம்பர் பிளேட் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு வாகனங்களுக்கான பிரத்தியோக எண்னைக் கொண்டிருப்பது தெரியவந்தது இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அது போலியான நம்பர் பிளேட் என தெரிந்தது அந்த காரினுள் மிரட்டல் கடிதம் ஒன்றும் கண்டறியப்பட்டது.

 

ஆனால் அந்தக் கடிதம் பற்றி காவல் துறையினர் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை. மேலும் மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் அவர்கள் முகேஷ் அம்பானி இல்லத்திற்கு அருகில் ஸ்கார்பியோ வேனிலிருந்து வெடிபொருள்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் இதுகுறித்து மும்பை  குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்

Categories

Tech |