திமுகவின் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர் கூட்டம் வரும் 26-ஆம் தேதி பகல் 12 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் அறிவாலயத்தில் நடைபெறும் என திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக ஆலோசிக்கபட இருப்பதால், இது முக்கிய கூட்டமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்திய அரசின் மூன்று வேளாண் மசோதாவிற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதைத்தொடர்ந்து ஜிஎஸ்டி வருவாய் விஷயங்கள், சமீபத்தில் கிடைக்க வேண்டிய நிதி, நிவர் புயல் நிவாரணங்களில் தமிழகத்துக்கு தேவையான இழப்பீட்டை மத்திய அரசிலிருந்து கேட்டுப் பெற வேண்டி இருக்கிறது. இப்படி பல்வேறு விஷயங்கள் குறித்து எம்பிக்களிடம் முக.ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கின்றார்.
நாடாளுமன்றத்தில் முன்வைக்கக் கூடிய முக்கியமான கோரிக்கைகள் என்ன ? தமிழக நலன் கருதி, தமிழகம் உரிமை சார்ந்த விஷயம் எல்லாம் பேச வேண்டி இருப்பதால் இது தொடர்பான ஒரு ஆலோசனை கூட்டமாக இ பார்க்கபடுகிறது. தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக நாடாளுமன்ற கூட்டத்தில் திமுக எம்பிக்கள் பங்கேற்கிறார்கள் என்பதால் மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.