Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

முக்கிய அறிவிப்பு …! இரவு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்…. வெளியான எச்சரிக்கை….!!!!

நீலகிரி கூடலூர் அருகே ஒற்றை காட்டு யானை சுற்றி வருவதால், கிராம மக்கள் இரவில் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட ஆரோட்டு பாறை பகுதியில், 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரை தாக்கி கொன்ற ராதகிருஷ்ணன் என்ற காட்டு யானை, சில நாட்களுக்கு முன்னர் ஆனந்தன் என்பவரை தாக்கி கொன்றது. இதனையடுத்து தற்போது வனப்பகுதியில் மறைந்துள்ள ராதகிருஷ்ணன் யானையை கும்கி யானைகளின் உதவியோடு தேடும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர், அந்த யானை இரவில் கிராம பகுதிக்குள் வர வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் யாரும் இரவில் வெளியே வரவேண்டாம் என வீதி வீதியாக ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

Categories

Tech |