Categories
தேசிய செய்திகள்

முக்கிய ஆவணங்களை ஆன்லைனில் பத்திரமாக பாதுகாப்பது எப்படி…? உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!!

தற்போது அனைத்து செயல்பாடுகளுக்கும் ஆவணங்களின் ஆதாரம் அவசியமான ஒன்றாக இருக்கிறது. தற்போது அனைத்து ஆவணங்களையும் ஒரே இடத்தில் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி டிஜி லாக்கர் செயலியில் அனைத்து ஆவணங்களையும் ஆன்லைனில் சேமித்து வைத்துக் கொள்ள முடிகிறது. இதனால் கையில் ஆவணங்களை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய டிஜி லாக்கரில் மதிப்பெண் பட்டியல்கள், ரேஷன் கார்டு மற்றும் ஆதார் போன்ற அனைத்து ஆவணங்களையும் சேமித்து வைக்க முடிகிறது. ஆனால் அதில் தற்போது ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களுக்கு உதவும் விதமாக ஓய்வூதிய சான்றிதழை டிஜி லாக்கரை பயன்படுத்தி பெறுவதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது அந்த வழிமுறைகளை இங்கே காண்போம்.

  • உங்கள் ஸ்மார்ட் போனில் டிஜி லாக்கர் செயலி ஓபன் செய்ய வேண்டும்.
  • அதன் உள்நுழைய உங்கள் ஆதார் எண் அல்லது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் மற்றும் ஆறு இலக்க பாதுகாப்பு பின்னை உள்ளிட வேண்டும்.
  • இப்பொழுது ஒரு ஓடிபி உங்களுக்கு அனுப்பப்படும் அதனை பதிவிட்டு நீங்கள் உங்கள் டிஜி லாக்கரை அணுக முடியும்.
  • வலைத்தளத்தின் இடது பக்கத்தில் அமைந்துள்ள மெனுவில் தேடல் ஆவணங்கள் என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் ஓய்வூதிய ஆவணம் என தட்டச்சு செய்து அடுத்து ஓய்வூதியம் பெறுபவரின் பிறந்த தேதி மற்றும் பிபிஓஎன் போன்றவற்றை உள்ளிட வேண்டும்.
  • Ppo வரிசைக்கு அடுத்துள்ள தேர்வு பெட்டியில் give consent to digilocker to share my details with the issuers for the purpose of obtaing my papers தேர்வு செய்து அதன் பின் கெட் டாக்குமெண்ட் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும் தற்போது உங்களது ஆவணம் உங்களுக்கு கிடைத்து விடும்.

Categories

Tech |