Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

முக்கிய இயக்குனருடன் இணைந்த நிவின் பாலி… வெளியான தகவல்கள்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

பிரபல நடிகர் நிவின் பாலி அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை இயக்குனர் ராம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகர் நிவின் பாலி ‘நேரம்’ படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின் ‘ரிச்சி’ படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை .

ராம் படத்தில் நடிக்கும் நிவின் பாலி | Director ram to join with nivin pauly  exclusive details

இந்நிலையில் தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனரான ராம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இதற்கு முன்னர் இயக்குனர் ராம் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான ‘பேரன்பு’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது ‌.

Categories

Tech |