Categories
உலக செய்திகள்

முக்கிய எச்சரிக்கை ..! பிரிட்டனுக்கு ஆபத்து… மக்களே சந்திக்க ரெடியா இருங்க… மருத்துவர்கள் அலெர்ட் ….!!

பிரிட்டனில் அடுத்து வரக்கூடிய  கடினமான குளிர்காலத்தை எதிர்கொள்வதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று உயர் மருத்துவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

பிரிட்டனில் சுவாச நோய் மற்றும் காய்ச்சலால் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அடுத்து வரவிருக்கும் குளிர்காலத்தை மக்கள் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஒரு உயர் மருத்துவர் எச்சரிக்கை செய்துள்ளார். பிரிட்டனில் கொரோனா தொற்றால் தடுப்பூசி திட்டம் வழங்கப்படுவதால் கொரோனா பரவல் குறைவாக காணப்படுகிறது. அதனால் நேற்று முதல் பள்ளி ,கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு  கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

பப்ளிக் ஹெல்த் இங்கிலாந்தின் கோவிட் -19 ஸ்ட்ராட்டஜிக் ரெஸ்பான்ஸ் டைரக்டர் மருத்துவர் சூசன் ஹாப்கின்ஸ் நேற்று முன்தினம் ஊடகங்களில், பிரிட்டன் மக்களுக்கும் NHS -க்கும் இவ்வாறு எச்சரிக்கை செய்துள்ளார் . அதில் இந்த கோடைகாலம் முடிந்து அடுத்து குளிர் காலத்தில் மக்களுக்கு சுவாசம் நோய்  மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் கொரோனாவுடன் சேர்த்து ஏற்படலாம். இதனால் இறப்பு எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறி எச்சரித்துள்ளார் .

Categories

Tech |