மலையாளத்தின் முக்கிய கதை ஆசிரியர் மற்றும் இயக்குனர் டென்னிஸ் ஜோசப் காலமானார். இவருக்கு வயது 64. தமிழில் மணிரத்தினத்தின் அஞ்சலி படத்திற்கு முதலில் கதை எழுத ஒப்பந்தமானவர். அதன் பிறகு அவரால் பணியாற்ற முடியாமல் போனதால் இவரின் பெயரை பிரபு கதாபாத்திரத்திற்கு வைத்திருப்பார். மேலும் இவர் எழுதிய படங்கள்மக்கள் என் பக்கம் மற்றும் மனிதனின் மறுபக்கம் என தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த இவரது மறைவிற்கு திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Categories