Categories
மாநில செய்திகள்

முக்கிய செய்தி… அரசுப்பள்ளி மாணவர்களுக்கு…. 7.5% இடஒதுக்கீடு மசோதா… சட்டப்பேரவையில் நிறைவேற்றம்..!!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேறியது.

தமிழக சட்டமன்றத்தில் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வரும் நிலையில், இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.

அதன் பின் அவர் பேசியதாவது, கடந்த பல ஆண்டுகளாக அரசுப்பள்ளி மாணவர்கள் விரும்பும் உயர்கல்வியை பெறுவது மிகவும் கடினமாக இருக்கிறது. உயர்கல்வியில் அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பு கிடைப்பதில்லை. கிராமப்புற மாணவர்கள் தொழில் கல்வியில் சேர்வது குறைந்து வருவதால்  இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்..

இதனையடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி : பெரும்பாலும் ஏழை, எளிய, நடுத்தர குடும்ப மாணவர்கள் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர்.. அவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக கல்வி கற்க முடியாத சூழல் உள்ளது. ஆகவே தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்ட முன் வடிவை ஒரு மனதாக நாங்களும் ஆதரிக்கிறோம்” என்றார்..

இதனையடுத்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேறியது.

 

Categories

Tech |