Categories
மாநில செய்திகள்

முக்கிய தமிழக பிரபலம்… மருத்துவமனையில் சீரியஸ்…. பரபரப்பு…!!!!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் உடல்நிலை மோசமாக உள்ளது.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சகாயம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் தனிக்குழு அமைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அரசியல் பேரவையின் வேட்பாளராக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்படவே கடந்த 6ஆம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு கடந்த 8 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்து கொண்டே வருவதாக வும், அவரது உடல்நிலையை கண்காணிக்க மருத்துவர்கள் தனிக்குழு அமைத்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |