பிரபல இந்தி பேராசிரியர் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பாளருமான எச்.பாலசுப்பிரமணியம் கொரோனாவால் காலமானார்.
பிரபல இந்தி பேராசிரியரும், தமிழ் மொழி பெயர்ப்பாளருமான எச்.பாலசுப்பிரமணியம் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட முக்கிய பிரபலங்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளனர். அந்த வரிசையில் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது பூர்வீகம் கல்லிடைக்குறிச்சி. இந்தியில் முனைவர் பட்டம் பெற்ற இவர், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றினார். மேலும் உள்துறை அமைச்சக அதிகாரியாகவும், மனிதவள மேம்பாட்டு அமைச்சக இந்தி பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.