Categories
சினிமா தமிழ் சினிமா

முக்கிய திரை பிரபலம்… சென்னையில் திடீர் மரணம்… சோகம்…!!!

3 முறை தேசிய விருது பெற்ற பிரபல கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி என்ற சென்னையில் திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக மக்கள் அனைவருக்கும் இந்த வருடம் மிக மோசமான வருடமாக அமைந்துள்ளது. கொரோனா முதல் புயல் வரை பல்வேறு பாதிப்புகள் மக்களை தாக்கிக் கொண்டிருக்கின்றன. அதனால் பல்வேறு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. அதுமட்டுமன்றி திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் திடீர் மரணம் அடைகின்றனர். அது பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் 3 முறை தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி சென்னையில் காலமானார்.

இவர் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, பாண்டவர் பூமி, சங்கமம், அழகி மற்றும் நான் கடவுள் உள்ளிட்ட பல படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும் தமிழக அரசின் சினிமா விருது மற்றும் கேரள அரசின் சினிமா விருதுகள் பல விருதுகளை பெற்றுள்ளார். இவரது இறுதிச் சடங்குகள் இன்று மதியம் 12 மணிக்கு மேல் மடிப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற உள்ளது. அவரின் மறைவுக்கு திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |