புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழப்பாவூர் மற்றும் குறும்பலாபேரி ஆகிய முக்கிய பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் அருகில் இருக்கும் கடைகளில் கீழப்பாவூர் வட்டார மருத்துவ அலுவலர் ஆலோசனைப்படி அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ஒரு கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும் அனைத்து கடை உரிமையாளர்களுக்கும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக் கூடாது எனவும், தடை செய்யப்பட்ட பொருளை விற்பனை செய்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.