தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகளும், பாமகவுக்கு 23 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து பாமக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியானது. ஜெயங்கொண்டான் தொகுதியில் வழக்கறிஞர் பாலு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜெயங்கொண்டம் தொகுதியை வைத்தி எதிர்பார்த்திருந்த நிலையில் அவருக்கு அந்த தொகுதி கிடைக்காத காரணத்தினால் பாமகவில் இருந்தும், வன்னியர் சங்க பொறுப்பில் இருந்து விலகினார். இந்நிலையில் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நிர்வாகி விலகியதால் அந்த கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.