Categories
அரசியல் மாநில செய்திகள்

முக்குலத்தோரை புறம் தள்ள முடிவு…! இது மிகப்பெரிய துரோகம்… அரசின் மீது சரமாரி விமர்சனம்…!!

முக்குலத்தோர் சமுதாயத்தை புறம்தள்ள முடிவு எடுத்துள்ளதாக கருணாஸ் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1971ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற இடைத் தேர்தலில் திண்டுக்கலிலே மாயத்தை தேவரை தான் வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற்றார். அதற்கு முன்பாக பசும்பொன்  முத்துராமலிங்கத்தேவர் 1963இல் அவர் மறைந்த பொழுது, அன்றைக்கு பசுமை கிராமத்திலே ஐந்து மணி நேரம் தரையில அமர்ந்து, பேரறிஞர் அண்ணா அவர்களோடு…. எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களோடு அங்கே நடந்த இரங்கல் கூட்டத்திலே கலந்து கொண்டார்.

அதற்கு பிறகாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள்…. இன்றைக்கு 9 அமைச்சர்களை நான் சார்ந்த சமூகத்தின் பால் கொடுத்து இருக்கிறார்கள். அதையும் கடந்து 144 தடை உத்தரவு பசும்பொன்  உடைய விழாவிற்கு போட்டபொழுது மக்கள் வெகுண்டு எழுந்ததால் அவருடைய உணர்வுகளை மதித்து, புரட்சி தலைவி அம்மா அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய கட்சி நிதியிலிருந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு தங்கக் கவசம் வைத்திருக்கிறார்.

இப்படி இந்த கட்சியை உருவாக்கிய தலைவர்களும், இந்த கட்சியை கட்டி காப்பாற்றிய தலைவர்கள் எல்லாம் இந்த சமூகத்திற்கும், இந்த சமூகம் சார்ந்த முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தி கொண்டிருந்த வரலாறுகளை புறம் தள்ளி, இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி வன்னியர் சமூகத்தையும், அவர் சார்ந்த கவுண்டர் கொங்கு கவுண்டர் சமூகத்தையும் கையிலே எடுத்து , ஒட்டுமொத்த முக்குலத்தோர் சமுதாயத்தை புறம் தள்ள வேண்டும் என்ற முடிவு எடுத்து இருக்கிறார்.

ஒரு சில தலைவர்கள் நாங்கள் சார்ந்த சமூகத்தை குற்ற பரம்பரை என்று கீழ்த்தரமாகவும், கேவலமாகவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது மீம்ஸ்ஸாக சமூக வலைதலங்களிலேயே வளம் வந்து கொண்டிருக்கிறது. நான் ஒன்றை மட்டும் சொல்லுகிறேன். நாங்கள் குற்ற பரம்பரை அல்ல, கொற்றை பரம்பரை என்பதை இந்த நேரத்திலே பதிவு செய்கிறேன். அதே நேரத்திலே இந்த கொற்ற பரம்பரையாக இருந்த இந்த மக்கள் இன்றைக்கு அடிப்படை இட ஒதுக்கீடு களை கேட்பதற்கு நீண்ட காலங்களாக போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை, மறுக்கப்படுகிறது.

அதற்கு மாறாக எங்கள் சமூகத்தை புறம் தள்ளுவதற்கும் எடப்பாடி தலைமையான அரசும், என் சமூகம் சார்ந்த எட்டு அமைச்சர்களும் ஒன்றாக இணைந்து  இந்த சமூகத்திற்கு மிகப்பெரிய ஒரு துரோகத்தை செய்திருக்கிறார்கள். சமூகநீதியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எண்ணற்ற சமுதாய மக்களை புறந்தள்ளி, ஒரு சில சமுதாயத்தை தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக…  இந்த இக்கட்டான… இந்த அவசர கால கோலத்தில் சலுகை அறிவிக்கிறார்கள் என விமர்சித்தார்.

Categories

Tech |