தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும் தொகுதி பங்கீடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகிறது. ஒரு சில கட்சிகள் கூட்டணியுடன் ஏற்பட்ட அதிருப்தியில் காரணமாக தனித்தும் போட்டியிட இருக்கின்றன. இந்நிலையில் அதிமுகவுடன் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைவதாக அறிவித்தது. இதையடுத்து திமுகவிற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் வாங்கியது.
இதனால் முக்குலத்தோர் தேவர் படை கட்சி சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள போவது எப்படி என்று கேள்வி எழுந்து வந்த நிலையில் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கருணாஸ் அறிவித்துள்ளார். அதுமட்டுமன்றி முக்குலத்தோர் சமூகத்துக்கு துரோகமிழைத்த அதிமுகவை தோற்கடிக்க சபதம் எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை யாருக்கும் சார்பாக போட்டியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளது.