கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி திருவிழா கடந்த 26-ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் அம்மன் பரிவேட்டைக்கு செல்லும் சிகர நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை அடுத்து பரிவேட்டை மண்டபத்தை அடைந்த அம்மன் பாணாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து வெள்ளி பல்லக்கில் அம்மன் எழுந்தருளி நள்ளிரவு 12 மணிக்கு முக்கூடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி அம்மனை ஆராட்டிய போது ஐந்து விசேஷ நாட்களில் மட்டுமே திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசித்தார்.