முக்கொம்பு மேலணை பாலத்தில் கார்-ஆம்புலன்ஸ் சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் பிரபல சுற்றுலா தளமாக முக்கொம்பு இருக்கின்றது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஏராளமான பேர் அங்கு வந்தார்கள்.
இதில் மேலணை அப்பர் அணை கட்டுப்பகுதியிலிருந்து வந்த கார் ஒன்றும் வாத்தலை நோக்கி சென்ற 108 ஆம்புலன்ஸும் முக்கொம்பு நுழைவாயிலில் உரசி கொண்டு இரு வாகனங்களும் செல்ல முடியாமல் நின்றது. நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் ஆம்புலன்ஸும் காரும் நகர்ந்து சென்றது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.