முக கவசம் அணியாமல் வருபவர்களை மும்பை மாநகராட்சி நூதன முறையில் கண்டிக்கிறது
நாடு முழுவதிலும் கொரோனா பரவிய நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. கொரோனா பரவலை தடுப்பதற்காக முக கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது விதிமுறைகளை மீறி முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இருந்தாலும் முககவசம் அணிவதை பலரும் தவிர்த்து வந்தனர். இதனை தடுப்பதற்காக தற்போது மும்பை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்கள் தெருவை சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில் இந்த தண்டனை ஏற்கனவே அந்தேரி உள்ளிட்ட சில ஆகிய பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது. இதுவரை 100க்கும் அதிகமானவர்கள் சமூக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சாலையில் எச்சில் துப்பும் நபர்களுக்கு இதுபோன்ற தண்டனை வழங்குவதற்கான அதிகாரம் ஏற்கனவே மும்பை மாநகராட்சிக்கு இருந்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என கூறியுள்ளார்