முககவசம்தான் நமது வலிமை என்றும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சிஎஸ்கே அணி ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
இந்தியாவில் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதை தொடர்ந்து இந்தியாவில் ஐபிஎல் தொடரும் நடைபெற்று வருகின்றது. கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் உடன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா சூழலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கவசம் அணிய அவசியத்தை சிஎஸ்கே அணி ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமான முறையில் அறிவுறுத்தியுள்ளது. சிஎஸ்கே வீரர்கள் முக கவசம் அணிந்து செல்லும் புகைப்படத்தை பகிர்ந்து சிஎஸ்கே பக்கம்” முக கவசம் தான் நமது வலிமை. பாதுகாப்பாக இருங்கள்” என ட்வீட் செய்துள்ளது.