Categories
அரசியல்

முக கவசம் யாரும் அணிவதில்லை…..2,000 மினி கிளீனிக் திட்டம் முதலவர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் கொரானா பரிசோதனையை மேற்கொள்ள 2,000 மினி  கிளீனிக் ஏற்படுத்தும் திட்டத்தை முடிவு எடுத்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ,அமைச்சர் விஜயபாஸ்கர்,சுகாதாரத்துறை செயலாளர், ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஆலோசனை முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  கூறியதாவது மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரானா பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்றும்.

பல்வேறு மாவட்டங்களில் கொரானாவின் தாக்கம் படிப்படியாக குறைவதாகவும் நோய்த்தொற்று குறைந்து வருவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.தமிழகம் முழுவதும் கொரானா பரிசோதனையை மேற்கொள்ள 2,000 மினி கிளீனிக் ஏற்படுத்த முடிவும் ,அதில் மருத்துவர்கள்,, செவிலியர் ,மருத்துவ உதவியாளர் ஆகியோர் இடம் பெறுவார்கள் என கூறியுள்ளார்.துறைமுகமான காசிமேட்டில் மக்கள் தனி இடைவெளியை பின்பற்றுவதில்லை, 40 சதவீத மக்கள் முக கவசம் அணிவதில்லை.

ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி வாங்க குவியும் மக்கள் விதிகளைப் பின்பற்றுவதில் அதற்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் .சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் அதிகம் சேர்வதை காவல்துறையினர் தடுக்க வேண்டும். டெங்கு கொசுவை தடுப்பதற்கு எங்கேயும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த ஆலோசனையில் கூறியுள்ளார்.

Categories

Tech |