பெண் ஒருவர் முகநூலில் ஆண் நண்பருடன் இருக்கும் புகை படத்தை பகிர்ந்துவிட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த 19 வயதான பெண் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த டிசம்பர் 25 அன்று யார்க்ஷையர் நகரில் கடைசியாக காணப்பட்டுள்ளார். அதன்பின்பு அவர் வீட்டிற்கு திரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் காணாமல் போன அன்று ஆண் நண்பர் ஒருவருடன் உள்ள புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டுள்ளார். அதன் பின்பே அவர் காணாமல் போனதாக தெரிகிறது. இது குறித்து, அப்பெண்ணின் குடும்பத்தினர் கூறுகையில், இந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த ஆண் அவரின் காதலராக இருக்கலாம்.
மேலும் அவர் மாயமாவதற்கு அந்த நபரே காரணமாக கூட இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். ஆனால் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் இதுவரை எதுவும் உறுதிப்படுத்தவில்லை. மேலும் அப்பெண்ணின் தாய் கூறுகையில், நாங்கள் எப்போது போனில் அழைத்தாலும் உடனடியாக பதிலளிப்பார். ஆனால் அந்த நபரை நம்பி ஏமாந்து விடாதே என்று கண்ணீருடன் கூறியுள்ளனர். மேலும் என் மகளின் நெருங்கிய தோழிகள், அவரைக் குறித்து ஏதேனும் விவரம் தெரிந்தால் எங்களிடமோ அல்லது காவல்துறையினரிடமோ தெரியப்படுத்துங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.