முடக்குவாத பிரச்சனைகளை சரி செய்வதற்கு வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை சூப் செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் அதை எப்படி செய்வது என்பதை பற்றி இதில் பார்ப்போம்.
தேவையானவை:
முடக்கற்றான் சூப் தேவை முடக்கத்தான் கீரை – 1 கப் துவரம் பருப்பு – 2 டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 2 டீஸ்பூன் எண்ணெய் – 1 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் மிளகாய் வற்றல் – 3 புளி – எலுமிச்சை அளவு பெருங்காயம் – சிறிதளவு பூண்டு – 1 உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கீரையை நன்கு கழுவி, ஆய்ந்து தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்..
நான்கு டம்ளர் தண்ணீரில் உப்பு, புளியைக் கரைத்து கீரையில் விடவும். அரைத்து வைத்த விழுதையும் கீரையில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு இதனை இறக்கி வைத்துக் கடுகு பெருங்காயம் ஆகியவற்றை தாளித்துச் சேர்க்கவும். சூடாகப் பரிமாறவும்.
பயன்கள்:
முடக்கற்றான் இதன் பெயருக்கேற்ப முடக்குவாத நோய்களைத் தீர்க்க வல்லது. சிறுநீரை பெருக்கும். மூட்டு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை நீக்கும். பசியை தூண்டும். உடலை உரமாக்கும் குணம் கொண்டது.