Categories
தேசிய செய்திகள்

முடங்கிய தடுப்பூசி முன்பதிவு… மக்கள் கடும் அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.

அதனால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றால் கட்டாயம் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்ள “கோவின்” என்ற இணையத்தளத்தில் அல்லது ஆரோக்ய சேது மற்றும் உமாங் சேது என்ற ஆப் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு பலரும் நள்ளிரவு 12 மணி முதல் முன்பதிவு செய்ய முயன்றுள்ளனர். ஆனால், அனைவருக்கும் முன்பதிவு செய்வதற்கான பக்கமே காண்பிக்கவில்லை.

இந்நிலையில், இன்று மாலை 4 மணி முதல் கோவின், ஆரோக்ய சேது, உமாங் சேது ஆகிய செயலிகள் மூலம் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு விளக்கம் அளித்தது. இந்நிலையில், மாலை 4 மணிக்கு பதிவுகள் திறக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள், இணையத தளம் செயலிகள் முடங்கியது. பின்னர் அது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது

Categories

Tech |