திருநெல்வேலி மாநகராட்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலி டவுன் வாகையடி முனை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “திருநெல்வேலி மாநகர மக்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஏமாற்றியது போல இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் ஏமாற்றி விட மாட்டீர்கள் என நம்புகிறேன். எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தை முடக்கி விடுவேன் என கூறியுள்ளார். பாஜகவினர் உள்ள தைரியத்தால் அவர் இவ்வாறு கூறுகிறார். முடிந்தால் சட்டமன்றத்தை முடக்கி பார்க்கட்டும் அவ்வாறு முடக்ககினாலும் கூட நாங்கள் மீண்டும் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று பெரும்பான்மை ஆட்சியை பிடிப்போம் என்று கூறினார்.
இதனையடுத்து பெண் ஒருவர் உதயநிதி ஸ்டாலினிடம் கேஸ் சிலிண்டருக்கான மானியம் எப்போது வழங்கப்படும் என கேள்வி எழுப்பினார் .அதற்கு இன்னும் எட்டு மாத காலத்திற்குள் அனைத்து வாக்குறுதிகளும் நூறு சதவிகிதம் நிறைவேற்றப்படும் என பதிலளித்தார். அதோடு மாதம்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியையும் துரிதப்படுத்த உள்ளதாக அவர் கூறினார். தேர்தல் பரப்புரையில் கூறியதுபோல சிலிண்டர் விலை பெட்ரோல் டீசல் விலை போன்றவையும் படிப்படியாக குறைக்கப்படும் என அவர் வாக்குறுதியளித்தார்.