மேற்கு வங்காளத்தில் மாநில ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் ஆளுநர் சட்டமன்றத்தை முடக்கி வைத்தார். இதேபோல தமிழகத்திலும் நீட் தேர்வு விவகாரம் குறித்து ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இதனால் தமிழக சட்டப் பேரவையும் முடக்கபட வாய்ப்புள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மதுரையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் “தமிழக சட்டமன்றத்தை முடக்கிய விடுவோம் எனக் கூறுகிறார்கள். தைரியம் இருந்தால் முடக்கி பார்க்கட்டும்.
பாஜக இருக்கும் தைரியத்தில் அவர்கள் இவ்வாறெல்லாம் பேசுகிறார்கள் எனக் கூறினார். அதோடு சட்டமன்றத்தை முடக்கினால் மீண்டும் நடத்தப்படும் தேர்தலிலும் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று பெரும்பான்மையாக ஆட்சியை பிடிப்போம் எனவும் கூறியுள்ளார். கடந்த ஆட்சியில் 5 லட்சம் கோடி கஜானாவை காலி செய்துவிட்டு சென்றார்கள். அந்த இக்கட்டான நிலையிலும் கூட கொரோனா நிவாரண நிதி வழங்கி முதல்வர் மு.க ஸ்டாலின் சொன்னதை செய்தார்.” என அவர் கூறினார்.