Categories
அரசியல் மாநில செய்திகள்

முடிஞ்சா தூக்குங்க பார்க்கலாம்…. முதலில் தூக்கப்போவது யார்?…. பாஜக Vs திமுக….!!!!

திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் (திருச்சி சிவா மகன் சூர்யா) உங்கள் கட்சியில் இணைவது கொண்டாடும் தமிழக பாஜகவுக்கு ஒரு தகவல். உங்கள் கட்சியில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள் .தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கி விடுவோம் என்று திமுக எம்பி செந்தில்குமார் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை துணைத் தலைவராகவும் திமுக கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருப்பவர் திருச்சி சிவா. இவரின் மகன் சூர்யா சிவா. நேற்று இவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அதற்கான உறுப்பினர் அட்டையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் இதுகுறித்து தர்மபுரி எம்பி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவது கொண்டாடும் தமிழக பாஜக உங்களுக்கு ஒரு தகவல். உங்கள் கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கி விடுவோம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதிவால் பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்போது வானதி சீனிவாசன், சரஸ்வதி,நயினார் நாகேந்திரன் மற்றும் காந்தி ஆகிய 4 பேர் மட்டுமே பாஜக எம்எல்ஏ-களாக உள்ளனர். இவர்களில் யாரை குறிப்பிட்டார் என்று தெரியவில்லை.

இந்நிலையில் இதற்கு முடிந்தால் தூக்குங்கள் பார்க்கிறோம்.. என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சவால் விடுத்துள்ளார். வானதி சவாலை ஏற்ற திமுக அந்த 2 பேரையும் தூக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் அதற்குள் திமுகவின் முக்கிய புள்ளிகளை பாஜக தூக்கி விடும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |