நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் தர்மபுரி எம்பி செந்தில்குமார் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, பல அமெரிக்க மாகாணங்களை விட மொத்த பதிவில் தமிழகம் முன்னேறி இருக்கிறது. மேலும் சுயமரியாதைத் திருமணச் சட்டம் நாடு முழுவதும் கொண்டு வரப்பட வேண்டி தனிநபர் மசோதாவை எம் பி செந்தில்குமார் தாக்கல் செய்தார்.
பெரியாரின் முக்கியமான கொள்கைகளில் ஒன்றான சுயமரியாதை திருமணச் சட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டு வர வேண்டுமென தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார். இதனிடையே இந்து மக்களின் மனதை புண்படுத்தும்படி நாடாளுமன்றத்தில் தர்மபுரி எம்பி செந்தில்குமார் பேசி உள்ளதாக நாடாளுமன்ற உரிமைமீறல் குழுவில் எம்பி செந்தில்குமார் மீது புகார் அளிக்க உள்ளதாக இந்து மக்கள் கட்சி ஆபீஷியல் என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக எம் பி செந்தில்குமார் முடிந்தால் தொட்டுப்பார் ஐ அம் வெயிட்டிங் என பதிலடி கொடுத்து டிக்கெட் பதிவு செய்துள்ளார். இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.