மதுரை மாவட்டத்தில் மீண்டும் பெருக்கெடுக்கும் கொரோனாவால் மக்கள் அச்சத்திலுள்ளார்கள்.
உலக நாடுகள் அனைத்திலும் சீனாவிலிருந்து பரவிய கொரோனா தொற்று சுகாதார பேரழிவினை உண்டாக்கியதோடு, பொருளாதார வீழ்ச்சியும் ஏற்படுத்தியது. இதனால் அரசாங்கம் இத்தொற்றினை பரவாமல் தடுக்க பல முயற்சிகளையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளது. மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்ததால் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கிய தொற்று தற்போது மீண்டும் பெருக்கெடுக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் புதிதாக 22 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,467 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 7 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 20,881 ஆக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் தொற்றினால் பாதிக்கப்பட்டு 124 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.