மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் ரஜினி நாளை சென்னை திரும்புகிறார்.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி தினத்தில் ரிலீஸாகவுள்ளது. சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் ரஜினி மருத்துவ பரிசோதனைக்காக தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றிருந்தார். இதையடுத்து சிகிச்சை முடிந்து ரஜினி நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் மூன்று வாரங்களுக்குப் பின் நடிகர் ரஜினி இன்று அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு கிளம்பியுள்ளார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.