Categories
அரசியல் மாநில செய்திகள்

“முடிந்தால் என்னை கைது செய்யட்டும்”… திமுக அரசுக்கு பாஜக தலைவர் கே அண்ணாமலை சவால்…!!!!!

திண்டுக்கல் அடுத்துள்ள குடைப்பாறைபட்டி பகுதியில் கடந்த 25ஆம் தேதி பாஜக மாநகர மேற்கு மண்டல தலைவர் செந்தில் பாலாஜி குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்களுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள் மேலும் இது தொடர்பாக ஒருவரை கைது செய்திருக்கின்றனர். இதற்கிடையே சம்பவம் நடைபெற்ற இடத்தை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியபோது பாரதிய ஜனதா கட்சியின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்பினர் உடமைகள் சேதப்படுத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திண்டுக்கல்லில் நடந்த தீ வைப்பு சம்பவத்திற்கு தொடர்புடைய ஒரு நபரை போலீசார் கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதில் தொடர்புடைய மற்ற நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாரதிய ஜனதா கட்சியின் தொடர் போராட்டம் காரணமாக ஆங்காங்கே நடைபெற்ற தீ வைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் என்னை கைது செய்ய வேண்டும் என தெரிவிக்கின்றார் முடிந்தால் என்னை கைது செய்யட்டும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |