காவல்துறையினருக்கு சவால் விடுத்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாவட்டத்திலுள்ள செம்பியம் காவல்நிலையத்தில் ஹரி என்பவர் மீது கொலை, வழிப்பறி, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவர் செம்பியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் ஹரி வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூலித்து தொந்தரவு கொடுத்துள்ளார். இந்நிலையில் ஹரியை செம்பியம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இதற்கிடையில் “முடிந்தால் என்னை பிடியுங்கள் பார்க்கலாம்” என ஹரி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு காவல்துறையினருக்கு சவால் விடுத்துள்ளார். இந்நிலையில் செம்பியம் ரமணா நகரில் பதுங்கியிருந்த ஹரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன் பிறகு ஹரி சென்னை மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவின் படி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.