Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முடிந்த அமைச்சரவை கூட்டம்…. எடுக்கப்பட்ட முடிவுகள்… மக்கள் குழப்பம் தீர்ந்தது …!!

தமிழகத்தில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவது தமிழக அரசுக்கு புது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த சென்னையைப் போன்ற முழு முடக்க உத்தரவு பிறப்பிக்கலாமா ?  என்றெல்லாம் ஆலோசிக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

குறிப்பாக மதுரை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, வேலூர், சேலம் போன்ற மாவட்டங்களில் பரவி வரும் கொரோனவை கட்டுப்படுத்த நிச்சயம் முழு முடக்கம் பிற மாவட்டங்களில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமுடக்க தளர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்படி என்றால் முழுக்க உத்தரவுக்கு வாய்ப்பில்லை, ஊரடங்கி தளர்வுகள் ஏற்படும் என்று தெரிகிறது.

அமைச்சரவை முடிவுகள் குறித்த முழு விவரம் சற்று நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கொரோனா பரவல், தாக்கத்தால் பிற மாவட்டங்களில் முழு முடக்கம் இருக்கும் என்ற சந்தேகம் தற்போது தீர்ந்துள்ளது.

Categories

Tech |