ஆவின் உள்ளிட்ட நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து தலைமறைவான அவரை கைது செய்வதற்காக டிஎஸ்பி தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வருகிறது. இதையடுத்து, தனக்கு முன் ஜாமீன் வழங்கும்படி உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில், தனது உறவினர்கள் காவல்துறையினரால் துன்புறுத்தப்படுகிறார்கள் எனவும், தனது முன் ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.