சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் திமுக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் விதமாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு திமுக அரசின் சாதனைகளை குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் இரண்டாவது பெரிய நகரம். இது கோட்டையும் கோவிலும் அமைந்துள்ளது. இந்த ஊரில் கூட்டம் அமைத்து உரையாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு சரியாக ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் ஒரே ஒரு முறைதான் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு இயற்கை கொடுத்த வரத்தின் காரணமாக இந்த வருடம் மே மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அறிவித்தபோது அதற்கு வாய்ப்பே இல்லை என்று ஒரு சிலர் கூறினார்கள். ஆட்சிக்கு வந்த உடனேயே பெட்ரோல் விலையை குறைத்தது திமுக அரசு. மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை குறைக்கும் போது மாநில வரியும் குறையும் என்று தெரிவித்துள்ளார்.